திங்கள், 3 அக்டோபர், 2011

உள்ளாட்சி தேர்தல் 2011

தமிழ்நாட்டில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி என நான்கு வகையான உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளுக்கென அமைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் மற்றும் தலைவருக்கான தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல், 2011 நடத்தப்பட உள்ளது. 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் அக்டோபர் 24, 2011 அன்று முடிவடைகிறது. அந்தப் பதவிகளுக்கான தேர்தல்களை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது.

தேர்தல் அட்டவணை:-
வேட்பு மனு தாக்கல் துவக்கம்: செப்டம்பர் 22, 2011
மனு தாக்கல் கடைசி நாள்: செப்டம்பர் 29, 2011
மனு பரிசீலனை: செப்டம்பர் 30, 2011
திரும்பப் பெற கடைசி நாள் : அக்டோபர் 3, 2011
ஓட்டுப் பதிவு: அக்டோபர் 17, 2011 மற்றும் அக்டோபர் 19, 2011
ஓட்டு எண்ணிக்கை: அக்டோபர் 21, 2011

வாக்காளர்களும் வாக்குச் சாவடிகளும்:-
2011 உள்ளாட்சித் தேர்தலில் 4 கோடியே, 63 லட்சத்து, 37 ஆயிரத்து, 379 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியுடையவர்களாக உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 86 ஆயிரத்து, 104 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நகரப் பகுதிகள்:-
நகரப் பகுதிகளில், 1 கோடியே, 80 ஆயிரத்து, 195 ஆண் வாக்காளர்களும், 99 லட்சத்து, 13 ஆயிரத்து, 703 பெண் வாக்காளர்களும், 453 இதர வாக்காளர்களுமாக, மொத்தம், 1 கோடியே, 99 லட்சத்து, 94 ஆயிரத்து, 351 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 25 ஆயிரத்து, 590 வாக்குச் சாவடிகள், நகர்ப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலுக்காக 80 ஆயிரத்து 500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

ஊராட்சிப் பகுதிகள்:-
ஊராட்சிப் பகுதிகளில், 1 கோடியே, 33 லட்சத்து, 18 ஆயிரத்து, 643 ஆண் வாக்காளர்களும், 1 கோடியே, 31 லட்சத்து, 24 ஆயிரத்து, 227 பெண் வாக்காளர்களும், 158 இதர வாக்காளர்களுமாக, மொத்தம், 2 கோடியே, 64 லட்சத்து, 43 ஆயிரத்து, 28 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 60 ஆயிரத்து, 518 ஓட்டுச் சாவடிகள் ஊராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலுக்கு, 2 லட்சத்து 39 ஆயிரம் வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக